கிணற்றில் தவறி விழுந்து காளை சாவு
கிணற்றில் தவறி விழுந்து காளை பரிதாபமாக இறந்தது.
தோகைமலை
தோகைமலை அருகே உள்ள கழுகூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் நேற்று தனக்கு சொந்தமான மாடுகளை வழக்கம்போல் காட்டிற்கு அழைத்து சென்று மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ரூ.80 ஆயிரம் மதிப்பிலான காளை ஒன்று அப்பகுதியில் உள்ள 10 அடி கிணற்றில் விழுந்து தத்தளித்தது. இதைக்கண்ட கருப்பண்ணன் மற்றும் அக்கம், பக்கத்தினர் கயிறு மூலம் அந்த காளையை நீண்ட நேரம் போராடி மீட்டனர். இருப்பினும் அந்த காளை மூச்சுதிணறி பரிதாபமாக இறந்தது. இதனால் இறந்த காளைக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.