கோவையில் விபசார புரோக்கர்கள் 5 பேர் கைது

கோவையில் விபசார புரோக்கர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-28 19:04 GMT
கைது
கோவை,

கோவை அவினாசி ரோடு லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் மசாஜ் சென்டர் உள்ளது. இங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில்  நேற்றுமுன்தினம் போலீசார் சாதாரண உடையில் அங்கு சென்று வாடிக் கையாளர்கள் போன்று பேச்சுக்கொடுத்தனர். 

அப்போது, அங்கிருந்தவர்கள் பணம் கொடுத்தால் அழகிகளுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து  போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி 7 அழகிகளை மீட்டனர். பின்னர் அவர்களை காப்பகத்தில் சேர்த்தனர்.

விசாரணையில், கோவை, மைசூரு, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அழகிகளை காட்டி பணம் பறித்து விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

மேலும் அழகிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக சென்னை திரு வொற்றியூரை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 50), கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த செந்தமிழ்செல்வன் (24), கோவை பேரூர் தீத்திப் பளையத்தை சேர்ந்த ஆனந்த் (29) ஆகிய 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.


இது போன்று கோவை பி.பி.வீதி, ராஜவீதி சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக உக்கடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் தலைமையில் போலீசார் சாதாரண உடையில் சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது.ஆனால் அங்கு அழகிகள் யாரும் இல்லை. 

இதையடுத்து அங்கிருந்த புரோக்கர்களான சவுரிபாளையத்தை சேர்ந்த தியாகராஜன் (34), அன்னூர் புதுப்பள்ளியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்