மாடு மேய்க்க சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - 2 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மாடு மேய்க்க சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2021-03-29 00:34 IST
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தாசம்பட்டியை சேர்ந்த  19 வயது இளம்பெண் அந்த பகுதியில் உள்ள செலம்பு விளங்காடு காட்டு பகுதிக்கு ஆடு, மாடு மேய்க்க சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பிய போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். மேலும் அந்த வாலிபர்கள் அந்தப் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதுகுறித்து அந்த இளம்பெண் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்