வாகன சோதனையில் ரூ.13½ லட்சம் பறிமுதல்

பொள்ளாச்சி தொகுதியில் வாகன சோதனையின்போது ரூ.13½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-28 18:53 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் அதிகாரி முரளிதரன் தலைமையில் வாகன சோதனை நடத்தினர்.

 அப்போது, அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரிக்குள் ரூ.7 லட்சத்து 48 ஆயிரம் இருந்தது. 

உடனே லாரியை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தபோது கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஹனீபா என்பதும், ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு செல்வதும் தெரியவந்தது. 

இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், கோபாலபுரத்தில் அதிகாரி பூபாலகிருஷ்ணன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது, அந்த வழியாக வந்த காரில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.6 லட்சத்து 12 ஆயிரத்து 500-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பொள்ளாச்சி தொகுதியில் மட்டும் நேற்று ரூ.13 லட்சத்து 60 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்