பூதிமுட்லு கிராமத்தில் கோதண்டராமசாமி கோவில் தேரோட்டம்

பூதிமுட்லு கிராமத்தில் கோதண்டராமசாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2021-03-28 18:37 GMT
வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தில் உள்ள கோதண்டராம சாமி கோவில்  தேர்த்திருவிழா நடைபெற்றது. இந்த விழா கடந்த 22-ந்தேதி கோடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு தேரில் ஏற்றப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) ஆஞ்சநேயர் தேரோட்டமும், நாளை (செவ்வாய்க்கிழமை) பல்லக்கு உற்சவமும் நடக்கிறது.

மேலும் செய்திகள்