3 வயது குழந்தையுடன் விஷம் சாப்பிட்ட தாய் சாவு

3 வயது குழந்தையுடன் விஷம் சாப்பிட்ட தாய் உயிரிழந்தார்.

Update: 2021-03-28 17:53 GMT
பரமக்குடி, 
பரமக்குடி அருகே உள்ள குமரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லெட்சுமி (வயது26). இவர்களுக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல் சம்பவத்தன்று பிரச்சினை ஏற்பட்டதால் மனமுடைந்த வெட்சுமி எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு அவருடன் இருந்த 3 வயது பெண் குழந்தைக்கும் விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 
சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே லெட்சுமி வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்ததும் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு 2 பேரையும் கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி லெட்சுமி பரிதாபமாக இறந்துவிட்டார். 3 வயது பெண் குழந்தை தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்