ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து ஒற்றை எண்ணிக்கையிலேயே இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 8 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 6 ஆயிரத்து 539 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 367 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 35 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 137 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.