காரில் கொண்டு சென்ற ரூ.4½ லட்சம் பறிமுதல்

காரில் கொண்டு சென்ற ரூ.4½ லட்சம் பறிமுதல்.

Update: 2021-03-28 17:43 GMT
ரூ.4½ லட்சம் பறிமுதல்
மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் சிறுமுகையை அடுத்துள்ள பெத்திக்குட்டை அருகில் பறக்கும்படை நிலை கண்காணிப்பு குழு  அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் தலைமை காவலர் பொன்மணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியே காரில் வந்த சாம்ராஜ் நகரைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 61 ஆயிரத்து 500 வைத்திருந்தது தெரியவந்தது. 

இதுபோல் காரில் வந்த குண்டல்பேட்டை யைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 லட்சம்  வைத்திருந்தார். 
இதனை தொடர்ந்து இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல்செய்யப்பட்ட ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்து 500-ஐ மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசனிடம் அலுவலர் ராஜேஸ்வரி ஒப்படைத்தார்.

அப்போது அவருடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தாமணி தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்