ரூ. 8 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்,
உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கண்காணிப்பு குழு
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து 4 தொகுதிகளிலும் தலா 3 பறக்கும்படை, 3 நிலைத்த கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பரமக்குடி காவல் துணை கோட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 54 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கீழக்கரை காவல் துணை கோட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்து 430 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவாடானை காவல் துணை கோட்டத்தில் நடத்தப்பட்ட சோதனை யில் ரூ.4 லட்சத்து 23 ஆயிரத்து 70 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல்
மொத்தம் 3 காவல் துணை கோட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.8 லட்சத்து 15 ஆயிரத்து 554 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுஉள்ளது. இதுதவிர திருப்புல்லாணி சோதனை சாவடி பகுதியில் ஒரு காரில் கொண்டு செல்லப்பட்ட தி.மு.க. ஸ்டிக்கர்கள், கொடிகள், காலண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.