குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்;

Update: 2021-03-28 17:27 GMT
வேடசந்தூர் :
வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி காலனியில் குடிநீர ்வசதிக்காக ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 6 மாதங்களாக இங்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. எனவே பொதுமக்கள் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டது. 
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று பூத்தாம்பட்டியில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். எனவே வேடசந்தூர்-எரியோடு சாலையில் சிறிது நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் விரைந்து சென்று சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சமாதானம் செய்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்