திருக்கோவிலூர் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்
திருக்கோவிலூர்
முகையூர் ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முகையூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காருக்குள் இருந்த திருக்கோவிலூர் கீழையூர் பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 500 வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை திருக்கோவிலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.