துறையூர் நகர மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவேன் தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் பிரசாரம்
நகரில் உள்ள 24 வார்டுகளிலும் திறந்த வேனில் உதயசூரியனுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
துறையூர்,
துறையூர் தனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.நேற்று நகரில் உள்ள 24 வார்டுகளிலும் திறந்த வேனில் உதயசூரியனுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் பேசுகையில், துறையூர் நகர மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவேன். நகரில் புறவழிச்சாலை அமைக்கவும், அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தவும் பாடுபடுவேன்.
நகரில் தினசரி காவிரி கூட்டுக் குடிநீர் கிடைக்க முழுவீச்சில் பாடுபடுவேன் என கூறி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், மாவட்ட வர்த்தக அணி திருமூர்த்தி, வார்டு பிரதிநிதி அம்மன் பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிட்டப்பா, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மகாலிங்கம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி சேகர் மற்றும் சுதா செங்குட்டுவன், செல்வராணி சுதாகர், வார்டு செயலாளர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.