திருச்சி கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு பெண்கள் சிறப்பான வரவேற்பு

அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு சிந்தாமணி பகுதியில் பெண்கள் உற்சாகமாக பூரண கும்ப மரியதை வழங்கி, முளைப்பாரி, ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

Update: 2021-03-28 16:22 GMT
மலைக்கோட்டை, 

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், மாநகர் மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் நேற்று மலைக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் உள்ள 9, 9-எ மற்றும் மாலையில் பாலக்கரை பகுதியில் உள்ள 25-வது வார்டுகளுக்கு உட்பட்ட வார்டுகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். அப்போது அவருக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைதொடர்ந்து அவர் மேலசிந்தாமணியில் உள்ள காவேரி நகர், பழைய கரூர் ரோடு, சுப்ரமணிய சுவாமி கோவில் தெரு, அக்ரஹாரம், காவேரி பார்க், நடுத்தெரு, கொசமேட்டுத்தெரு, சஞ்சய் காந்தி நகர், கீழ சிந்தாமணி ஓடத்துறை, இந்திராநகர், திரவுபதி அம்மன் கோவில் தெரு, சிந்தாமணி பஜார், வெனிஸ் தெரு, வி.என்.நகர், காந்தி நகர், அந்தோணியார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்றும், ஒரு சில இடங்களில் பிரசார வேனில் நின்ற படியும் சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு சிந்தாமணி பகுதியில் பெண்கள் உற்சாகமாக பூரண கும்ப மரியதை வழங்கி, முளைப்பாரி, ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ஒன்றுவிடாமல் கிடைக்க பாடுபடுவேன் எனவும், அந்தந்த பகுதியில் உள்ள குறைகளை உடனடியாக சரி செய்து தரவும் பாடுபடுவேன் என அவர் வாக்குறுதி அளித்தார்.

இதில் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் சீனிவாசன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், வெல்லமண்டி சண்முகம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், ஜவஹர்லால் நேரு, வட்ட செயலாளர்கள் ராமமூர்த்தி, ராஜ்மோகன், பாபு, நிர்வாகிகள் வழக்கறிஞர் கங்கைச்செல்வன், சிந்தை தனபால், பிச்சைபாய், குவைத் மனோகரன், செல்வகுமார், ஏழுமலை உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினர்.

மேலும் செய்திகள்