உடன்குடியில் மாமியார் மீது தாக்குதல் மருமகனுக்கு வலைவீச்சு
உடன்குடியில் மாமியாரை தாக்கிய மருமகனை போலீசார் தேடிவருகின்றனர்.
உடன்குடி:
உடன்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முத்துகுட்டி மனைவி ராணி (வயது 58). இவரது மருமகன் உடன்குடி புதுமனை யைச் சேர்ந்த திருகுமரன் (34). இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினையில் முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று முத்துகுட்டி வீட்டிற்கு திருகுமரன் சென்றுள்ளார். அவரை அவதூறாக பேசி தென்னை மட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராணி உடன்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து செய்து திருகுமரனை தேடி வருகிறார்.