கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம்

கம்பத்தில் குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.;

Update: 2021-03-28 14:24 GMT
கம்பம்:
கம்பத்தில் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம், கம்பம் சி.எஸ்.ஐ.பேராலயங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்ற குருத்தோலை ஊர்வலம் நடந்தது. 

இதில் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஆண்களும், பெண்களும் மற்றும்  சிறுவர்-சிறுமிகளும் ஊர்வலமாக சென்றனர். 

இந்த ஊர்வலம் கம்பம் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியிலிருந்து தொடங்கி மெயின்ரோடு சிக்னல், ஓடைக்கரைத்தெரு வழியாக சி.எஸ்.ஐ. ஆலயத்தை அடைந்தது.

அங்கு தேவாலய போதகர் அருண்குமார் திருப்பலி நடத்தினார். 

பின்னர் மெயின்ரோடு வழியாக ஊர்வலம் கம்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தை வந்தடைந்தது. 

அங்கு கம்பம் பங்குத்தந்தை இளங்கோ அற்புதராஜ், மதுரை திருநகர் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 

இதில் கம்பம் பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்