புற்றுக்கோவிலில் திருவிளக்கு பூஜை

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2021-03-28 11:22 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் பங்குனி மாத உத்திரம் மற்றும் பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கி, கோடி சக்தி விநாயகர், வள்ளி தேவசேன சமேத கல்யாண முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதணை நடைபெற்றது. மாலையில் 51 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்