மேட்டுப்பாளையத்தில் பதற்றமான 51 வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
மேட்டுப்பாளையத்தில் பதற்றமான 51 வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று அதிகாரி கூறினார்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் பதற்றமான 51 வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று அதிகாரி கூறினார்.
ஆலோசனைக்கூட்டம்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர் குமரேசன் தலைமை தாங்கினார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தாமணி,மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனி தாசில்தார் ரங்கராஜன் வரவேற்று பேசினார்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.குமரேசன் பேசியதாவது:-
பதற்றமான வாக்குச்சாவடிகள்
வருகிற மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தலையொட்டி 51 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
அதில் நெல்லித்துறை கல்லாறு சற்குரு ஆதிவாசி குருகுலப்பள்ளி என 2 இடங்களிலுள்ள 5 வாக்குச்சாவடிகள் யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாகவும், பில்லூர், பரளி அத்திக்கடவு கோப்பனாரி ஆகிய 4 வாக்குச்சாவடிகளில் மாவோயிஸ்டுகளின் ஏதாவது இடையூறு ஏற்படலாம் என்றும் மேலும் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குடபட்ட 42 வாக்குச்சாவடிகளில் சாதி, மதரீதியாக சிறுசிறு சச்சரவுகள் ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 51 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார்.முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜெயசித்ரா நன்றி கூறினார்.