கோவை மாவட்டத்தில் 185 பேருக்கு கொரோனா
கோவை மாவட்டத்தில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
சுகாதாரத் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 77 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 107 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 56 ஆயிரத்து 296 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 1,092 பேர் சிகிச்சையில் உள்ளனர்.