தேனூர் பகுதியில் விவசாயிகள் பயனடையும் வகையில் தடுப்பணை உயர்த்திக் கட்டப்படும்; அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் பேச்சு

தேனூர் பகுதியில் விவசாயிகள் பயனடையும் வகையில் தடுப்பணை உயர்த்திக் கட்டப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் மாணிக்கம் எம்.எல்.ஏ.,பேசினார்.

Update: 2021-03-28 01:00 GMT
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் மாணிக்கம் சுட்டெரிக்கும் வெயிலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முழுவதும் சோழவந்தான் அருகே திருவேடகம், மேலக்கால், கச்சிராயிருப்பு, பொட்டல் பட்டி, கீழமட்டையான், மேல மட்டையான், ஊத்துக்குளி, நாராயணபுரம், மலைப்பட்டி, ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருக்கு கிராமங்கள் தோறும் பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர். அதன்பின் திறந்த ஜுப்பில் நின்றபடி வேட்பாளர் மாணிக்கம் பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது.- 
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய திருநாடே வியக்கும் அளவில் அ.தி.மு.க.அரசு தமிழகத்தில் பல்வேறு சாதனைகளை செய்து உள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சாலை, குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றை 
செய்து முடித்துள்ளேன். கொரோனாகாலத்தில் எதிர் கட்சியினர் வீட்டில் முடங்கி இருந்தபோது உயிரையும் துச்சமாக நினைத்து வீடுவீடாக சென்று அரிசி, காய்கறி, பலசரக்கு தொகுப்புகளையும், கொ ரோனா களபணியாளர் களுக்கு 3 வேளையும் தொடர்ந்து 2மாதங்கள் உணவுகளையும் கொடுத்துள்ளேன். 

சாமானியர்களின் முதல்வர் எடப்பாடியார் கூட்டுறவுவங்கி கடன் மட்டு மல்லாமல் மகளிர் சுயஉதவிக் கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல் ஆட்சிக்கு வந்ததும் வீட்டுக்கு ஒரு வாசிங்மிஷின், ஆண்டு 6 விலையில்லா சிலிண்டர், குடும்பதலைவிக்கு ரூ.1,500, 200 யூனிட் இலவச மின்சாரம், அனைவருக்கும் வீடு, வீட்டுக்கு ஒருவருக்கு அரசுவேலை என்று அனைத்தையும் நிறை வேற்றுவோம். மேலும் தென் கரையில் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டப்படும். விவசாயிகள் பயனடையும் வகையில் தேனூரில் தடுப்பணை உயர்த்தி கட்டப் படும். சமுதாயக் கூடம் அமைக்கப்படும். அதனால் இரட்டை இலையில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார். 

உடன் திருவேடகம் ராமுஅம்பலம், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மணிபெரியசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.கே.முருகேசன், பேரூர்செயலாளர் கொரியர் கணேசன், ஊரட்சி மன்ற தலைவர் ஆலயமணி, கூட்டுறவு சங்கதலைர்கள் உங்குசாமி, முனியாண்டி, பாரதிய ஜனதா ஒன்றிய தலைவர் முருகேஷ்வரி, ஒன்றிய துணைசெயலாளர் செல்வி உள்படபலர் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்