பதிவான தபால் வாக்குகள் ஆர் டி ஓ அலுவலக தனி அறையில் வைத்து சீல் வைப்பு

பதிவான தபால் வாக்குகள் ஆர் டி ஓ அலுவலக தனி அறையில் வைத்து சீல் வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Update: 2021-03-27 23:49 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 3 ஆயிரத்து 343 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் 1,2,3, மற்றும் 4 ஆகிய அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறை குறித்து பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி மையத்தில் தபால் வாக்கு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
வாக்குச்சாவடி அலுவலர்கள் எந்த தொகுதியில் வாக்கு உள்ளதோ? அந்த தொகுதியின் பொறுப்பு அதிகாரிகள் குழுவினர் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடத்திற்கு வந்து தபால் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதன்படி திருப்பூர் வடக்கு தொகுதியில் 334 தபால் வாக்குகள் பெறப்பட்டிருந்தது. இந்த வாக்கு சீட்டுகள் அனைத்தும் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்குள்ள இருப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் சீல் வைத்தார். தொடர்ந்து அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-----------

மேலும் செய்திகள்