முன்னேற்பாடு பணிகளை சப்-கலெக்டர் ஆய்வு

முன்னேற்பாடு பணிகளை சப்-கலெக்டர் ஆய்வு

Update: 2021-03-27 23:22 GMT
ஊட்டி

ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்கை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவை ஊட்டி பிரிக்ஸ் பள்ளி பாதுகாப்பு கிடங்கில் வைத்து சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஊட்டி சப்-கலெக்டர் அலுவலக பாதுகாப்பு கிடங்கில் இருந்து வாக்கை உறுதி செய்யும் 18 எந்திரங்கள் பிரிக்ஸ் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. 

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சப்-கலெக்டர் மோனிகா தலைமையில் பாதுகாப்பு கிடங்கின் சீல் அகற்றப்பட்டது. பின்னர் உள்ளே எந்திரங்கள் வைக்கப்பட்டது. தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவற்றை 

எந்திரங்களில் பொருத்துவது, பரிசோதனை செய்வது, 31 மண்டலம் வாரியாக வாக்குச்சாவடிகளுக்கு எந்திரங்களை அனுப்ப தனித்தனியாக எடுத்து வைப்பது போன்ற முன்னேற்பாடு பணிகளை சப்-கலெக்டர் மோனிகா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊட்டி தாசில்தார் குப்புராஜ் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்