நூல் ஏற்றுமதிக்கு வரி விதிக்க வேண்டும்

நூல் ஏற்றுமதிக்கு வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏ இ பி சி கடிதம் அனுப்பியுள்ளது

Update: 2021-03-27 23:17 GMT
திருப்பூர்
மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு, ஏ.இ.பி.சி. அகில இந்திய தலைவர் சக்திவேல் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது
இந்திய பருத்தி கழகம் பஞ்சு விலையை குறைத்துள்ளது. சிறிய நூற்பாலைகளுக்கு பஞ்சு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நூற்பாலைகள், நூல் விலையை குறைக்கவில்லை. பஞ்சு விலையை விட நூல் விலை உயர்வு விகிதம் மிக அதிகமாக உள்ளது. உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு போதிய அளவில் நூல் கிடைப்பதில்லை. மூலப்பொருள் தட்டுப்பாட்டால் எற்றுமதி நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆடை தயாரிக்க முடியவில்லை.
உள்நாட்டுக்கான ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கைத்தறி, விசைத்தறி, நெசவுதுறையினரும், நூல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுகின்றனர். உள்நாட்டு ஆடை உற்பத்தி பாதிப்பால், பல லட்சம் தொழிலாளர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட வாயப்புள்ளது. நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். நூல் ஏற்றுமதிக்கு வரி விதிக்க வேண்டும். இதன்மூலம் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சீரான விலைக்கு போதுமான அளவு நூல் கிடைக்கும். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்