ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவேன்; காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் உறுதி

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பிரசாரத்தில் உறுதி அளித்தார்.

Update: 2021-03-27 23:15 GMT
காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பிரசாரம்
காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பிரசாரம்
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.நேற்று காலையில் பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளி கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து கோவங்காடு வடக்கு, கோவங்காடு தெற்கு, அம்பேத்கர் நகர், சோலைபுதூர், பெத்தனாட்சி நகர், சிதம்பர நகர், மஞ்சள்நீர்காயல், பழையகாயல் மெயின்ரோடு, சர்வோதயாபுரி, ராமச்சந்திராபுரம், ரட்சன்யாபுரம், அம்புரோஸ் நகர் கடற்கரை பகுதி, பழையகாயல், அகரம், அகரம் காலனி, மாரமங்கலம், தீப்பாச்சி, தளவாய்புரம், இடையர்காடு, காவல்காடு, சம்படி காலனி, சம்படி உள்ளிட்ட கிராமங்களில் சென்று கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.மாலையில் பெரும்படைசாத்தான் கோவில், புது நகர், கரையடியூர், ஆறுமுகமங்கலம், கொட்டாரகுறிச்சி, செல்வநாயகபுரம், கணபதி சமுத்திரம், அண்ணாநகர், அரியபுரம், அதிசயபுரம், லட்சுமிபுரம், சென்னல்மாநகரம், அக்கசாலை, கொற்கை, கொற்கை மணலூர், வாழவல்லான், முக்காணி ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் பொதுமக்கள் பட்டாசு வெடித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பல்வேறு இடங்ளிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து 
வரவேற்றனர். வணிகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுர்களும் பொன்னாடை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பேசியதாவது:-

வேலைவாய்ப்புகள் வழங்க...
எனது தந்தை ஊர்வசி செல்வராஜ், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, பல நல்ல திட்டங்களை செய்து கொடுத்தார். அதேபோல் நானும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுப்பேன். தொகுதி முழுவதும் தரமான சாலைகள் அமைக்கப்படும். குடிநீர், கல்வி, விவசாயம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவேன்.ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விவசாயமே பிரதான தொழிலாகும். எனவே, விவசாயத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பேன். அனைத்து குளங்கள், கால்வாய்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி விவசாயம் செழிக்க ஏற்பாடு செய்வேன். நீர்நிலைகளின் கரையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவேன். அடிக்கடி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன். 

தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்வேன்.தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. மத்திய பா.ஜனதா அரசு தொடர்ந்து சிறுபான்மையின மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம், நீட் தேர்வு, புதிய வேளாண் சட்டங்கள் என மக்களை பெரிதும் பாதிக்கும் சட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. சரக்கு சேவை வரி, உயர் பணமதிப்பு இழப்பு போன்றவற்றால் பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதற்கான தேர்தல்தான் வருகின்ற சட்டமன்ற தேர்தல். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே அனைவரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும். இதற்கு கை சின்னத்தில் எனக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். நான் என்றும் உங்களுடனே இருந்து தொண்டாற்றுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்
ஸ்ரீவைகுண்டம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.ஜி.ரவி, பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார், அணிகளின் துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், அனஸ், ஜெய்சங்கர், ராயப்பன், துரை, பிரபாகரன், வேங்கையன், பழையகாயல் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயக்குமார், மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுபமாரியப்பன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரராஜன், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் தாசன், சொரிமுத்து பிரதாபன், யூனியன் கவுன்சிலர் பாரத், மகளிரணி பிரவீனா மற்றும் டேவிட், பிரபாகரன், ஜெயக்கொடி உள்பட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து 
கொண்டனர்.

மேலும் செய்திகள்