தேர்தலில் பயன்படுத்தும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தம்
தேர்தலில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் எந்தந்த பகுதிகளுக்கு செல்கின்றன என்பதை கண்காணிப்பதற்காக ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு வருகிறது.;
ஈரோடு
தமிழக சட்டமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவற்றை கொண்டு செல்வதற்காக தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே தேர்தலில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் எந்தந்த பகுதிகளுக்கு செல்கின்றன என்பதை கண்காணிப்பதற்காக ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தேர்தலில் பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவிகள் நேற்று பொருத்தப்பட்டன.