தேர்தல் விழிப்புணர்வு பேரணி
வாசுதேவநல்லூரில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.;
வாசுதேவநல்லூர், மார்ச்:
வாசுதேவநல்லூர் மகாத்மா காந்தி சேவா சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியின் தலைவர் கு.தவமணி தொடங்கி வைத்தார். காமராஜர் சிலை, மந்தை விநாயகர் கோவிலின் வழியே சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஹெலன் இவாஞ்சிலின், சிறப்பாசிரியர் சங்கரசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.