வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்
கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
கடையநல்லூர், மார்ச்:
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் எடுக்கப்பட்டு சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது. கடையநல்லூர் தொகுதியில் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதியில் 411 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. கடையநல்லூர் தொகுதியில் 21 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குப்பதிவுக்கு 2 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷீலா மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கடையநல்லூர் தாசில்தார் ஆதிநாராயணன், செங்கோட்டை தாசில்தார் ரோஷன் பேகம் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.