கோவிலில் திருவிளக்கு பூஜை
முக்கூடல் அருகே சடையப்பபுரத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
முக்கூடல், மார்ச்:
முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரத்தில் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட சந்தன மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். திருவிழாவுக்கு முதல் நாளில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெண்கள் பலர் கலந்துகொண்டு விளக்கு பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.