நாங்குநேரி பெருமாள் கோவில் தங்க தேரோட்டம்
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் தங்க தேரோட்டம் நடந்தது.;
நாங்குநேரி, மார்ச்:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. இதனையடுத்து பெருமாளுக்கும், திருவரமங்கை தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. கடந்த 10 நாட்களாக பெருமாள், தாயாருடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். இந்நிலையில் நேற்று காலை பெருமாள் தங்க தேரில் எழுந்தருளினார். இதனையடுத்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அப்பகுதியில் மிதமான மழை பெய்தது. கொட்டும் மழையில் நனைந்து கொண்டே தேர் வீதி உலா நடந்தது.