பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா
சேத்தூரில் பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
தளவாய்புரம்,
சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் ஆண்டுதோறும் 600-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று முன்தினம் இரவு அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.