அரவக்குறிச்சி தொகுதியில் மத்திய மந்திரி அமித்ஷா 1-ந்தேதி தேர்தல் பிரசாரம்
அரவக்குறிச்சி தொகுதியில் மத்திய மந்திரி அமித்ஷா 1-ந்தேதி தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
வேலாயுதம்பாளையம்
மத்திய மந்திரி அமித்ஷா அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டி தேர்தல் பிரசாரம் செய்ய வருகிற 1-ந்தேதி (வியாழக்கிழமை) அரவக்குறிச்சிவருகிறார். இதையொட்டி அவர் பிரசாரம் செய்வதற்கான இடம் வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி மற்றும் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழுவினர் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியில் எவ்வாறு பாதுகாப்பு நடை முறைகளை பின்பற்ற வேண்டும், பொதுமக்களை எங்கு நிற்க வைக்க வேண்டும், எந்த பகுதிகளில் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு ஆலோசனைகள் செய்தனர். இதனால் அந்த பகுதி நேற்று பெரும் பரபரப்பாக காணப்பட்டது.