சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியில் பிரசித்தி பெற்ற பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு பெண்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.