5 ஆண்டு தண்டனை பெற்ற வழக்கில் வாலிபருக்கு ஜாமீன்
5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட வாலிபருக்கு ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,மார்ச்
5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட வாலிபருக்கு ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 ஆண்டு சிறை
மதுரை அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். அதே பகுதியை சேர்ந்தவர் மோகனதீபா. இவர் 16.2.2013 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு சென்று அவரை பாலசுப்பிரமணியம் மானபங்கப்படுத்த முயன்றதாகவும், அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடிவிட்டதாகவும் தனது சகோதரி பிரபாவிடம் தெரிவித்துள்ளார். மறுநாள் மோகனதீபா, பூச்சிமருந்தை குடித்து தற்கொலை முயன்றதாக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில், எனக்கு அதிகபட்சமாக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதமாகவும் விதித்து கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். இதை கோர்ட்டு முழுமையாக விசாரிக்க தவறிவிட்டது. எந்த தவறும் செய்யாத நான், கடந்த 2 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். எனவே இந்த வழக்கில் எனக்கு விதித்த தண்டனையை ரத்து செய்தும், முதல்கட்டமாக ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
வாலிபருக்கு ஜாமீன்
இந்த வழக்கு நீதிபதி தாரணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் ஒய்.கிருஷ்ணன் ஆஜராகி, இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி தாக்கல் செய்து உள்ள அறிக்கையில் இறந்தவரின் வீட்டில் ஒரே ஒரு வாசல் தான் இருந்தது எனவும், வீட்டின் சுற்றுச்சுவர் இருந்ததாகவும் குறிப்பிடவில்லை. இறந்தவரை மானபங்கப்படுத்த முயன்ற குற்றச்சாட்டை நேரடியாக பார்த்த சாட்சி இல்லை.
மேலும் மனுதாரரும், இறந்தவரும் காதலித்து உள்ளதாகவும், இவர்கள் இருவரின் வீட்டினருக்கும் இடையே ஏற்கனவே பேச்சுவார்த்தை இல்லாததால் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாகவும் சாட்சி விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை கீழ்கோர்ட்டில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.