நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்கள் வீடுகளிலிருந்து ஓட்டளிக்கும் தபால் ஓட்டு முறை இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் கல்லலை சுற்றியுள்ள தேவபட்டு, குருந்தம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட தபால் ஓட்டுகள் அவரது வீடுகளுக்கே சென்று பதிவு செய்யப்பட்டது. தேர்தல் அலுவலர்கள் 4 பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் முகவர்கள் மற்றும் உள்ளூர் வருவாய்த்துறையினர் போலீசார் பாதுகாப்புடன் வீடுகளுக்கே சென்று வீடியோ பதிவில் வாக்காளருடைய ஒப்புதல் பெற்று கையெழுத்து பெற்று பின் ஒரு மறைவிடத்தில் இந்த வாக்காளர் சுதந்திரமாக தனியாக வாக்களிப்பதற்காக ஒரு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. வாக்களித்த பின்னர் அவர்களே அந்த ஓட்டு சீட்டை மடித்து கவரில் வைத்து ஒட்டி கொடுக்கின்றனர், தபால் ஓட்டுபதிவு செய்வதில் தேர்தல் அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.