வாலிபரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியவர் கைது
தூத்துக்குடியில் வாலிபரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;
தூத்துக்குடி:
தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர் வீட்டில் பூனைக்குட்டி வளர்த்து வந்தார். நேற்று அவரது பூனைக்குட்டி பக்கத்து வீடான அருண்குமார் என்பவரின் அக்கா வீட்டுக்குள் சென்று உள்ளது. இதனை பிடிப்பதற்காக சதீஷ்குமார் சென்று உள்ளார். இதனை பார்த்த அருண்குமாருக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார், கிரிக்கெட் மட்டையால் சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.