வல்லநாடு சரணாலயத்தில் 320 மான்கள்; கணக்கெடுப்பில் தகவல்

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் 320 மான்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.

Update: 2021-03-27 17:42 GMT
தூத்துக்குடி:
வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் வெளிமான், கடமான் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இந்த சரணாலயத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வன உயிரினம் கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு மாவட்ட வன அலுவலர் செண்பகபிரியா தலைமையில் நடந்தது.  இந்த கணக்கெடுப்பு பணியில் வனச்சரக அலுவலர் விமல்குமார் தலைமையில், வனகாப்பாளர்கள், தோட்டக் காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் 35 பேர் ஈடுபட்டனர். இந்த பணிகள் நேற்று முன்தினம் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து அங்கு வாழும் உயிரினங்களின் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி சரணாலயத்தில் வெளிமான்கள் 243-ம், புள்ளிமான்கள் 47-ம், கடமான்கள் 30-ம் இருப்பது தெரியவந்து உள்ளது. இதுதவிர நரி, முயல் உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்