கோவில்பட்டிக்கு 450 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்படடது
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டிக்கு 450 வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று கொண்டு வரப்பட்டன.
கோவில்பட்டி:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தலுக்காக மொத்தம் 375 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஏற்கனவே 450 வாக்குப்பதிவு எந்திரங்கள் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நேற்று காலையில் தூத்துக்குடி புதுக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் இருந்து 450 வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரி மூலம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. கோவில்பட்டி உதவி தேர்தல் அதிகாரி தாசில்தார் அமுதா, தேர்தல் துணை தாசில்தார் சுரேஷ் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இறக்கப்பட்டு, அங்குள்ள தனி அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.