சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு சேகரிப்பு
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு சேகரிப்பு
சங்கராபுரம்
சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 926 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் ரெயில்வே, கப்பல், விமான பணியாளர்கள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி சங்கராபுரம் தொகுதியில் நேற்றைய நிலவரப்படி 1,829 அரசு பணியாளர்கள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 358 பேர், மாற்றுத்திறனாளிகள் 96 பேர் தபால் ஓட்டுப்போடுவதற்காக விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த நிலையில் தபால் வாக்குகளை சேகரிப்பதற்காக சங்கராபுரம் தொகுதி 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலத்துக்கு ஒரு குழு வீதம் 7 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் நேற்று வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகளை சேகரித்தனர். சங்கராபுரத்தில் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் முதியவரிடம் வட்டார கல்வி அலுவலர் ஞானப்பூ தலைமையிலான குழுவினர் தபால் வாக்கை சேகரித்தனர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் நிமலன் உடன் இருந்தார்.