கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஜெகரண்டா பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.;

Update: 2021-03-27 16:24 GMT
கொடைக்கானல்

 கொடைக்கானல் பகுதியில் தற்போது குளிர் காலம் முடிவடைந்து குளு, குளு சீசன் தொடங்கும் நிலை உள்ளது. அதன்படி பகல்நேரத்தில் லேசான வெயிலும், பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன் கூடிய ரம்மியமான சூழலும் நிலவி வருகிறது. 

இதற்கிடையே கொடைக்கானல் மலைப்பகுதியில் ஜெகரண்டா பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. மரங்களில் இலைகள் தெரியாத அளவுக்கு நீலநிறத்தில் பூத்துக்குலுங்கும் இந்த பூக்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. 

குறிப்பாக வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையோரத்தில் ஏராளமான மரங்களில் ஜெகரண்டா பூக்கள் பூத்துள்ளன. கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இந்த பூக்கள் உள்ளன. பூக்களை ரசிக்கும் சுற்றுலா பயணிகள், புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.

மேலும் செய்திகள்