சாராயம் விற்ற 2 பேர் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

Update: 2021-03-27 16:18 GMT
சங்கராபுரம்

சங்கராபுரம்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், சவுக்கத்அலி ஆகியோர் தலைமையிலான போலீசார் அரசராம்பட்டு மற்றும் கள்ளிப்பட்டு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அரசராம்பட்டு கிராமத்தில் உள்ள குளத்தின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(வயது 50) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் கள்ளிப்பட்டு முனியப்பன் கோவில் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த வெதூர்கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் சக்திவேல்(வயது 30) என்பவரை கைது செய்த போலீசாா் அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்