தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அம்மா இல்லம் திட்டம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கப்படும்; அ.தி.மு.க. வேட்பாளர் பவுன்ராஜ் வாக்குறுதி

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அம்மா இல்லம் திட்டம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் பவுன்ராஜ் வாக்கு சேகரிப்பின்போது வாக்குறுதி அளித்துள்ளார்.

Update: 2021-03-27 01:00 GMT
வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை மாவட்ட பூம்புகார் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான எஸ்.பவுன்ராஜ் போட்டியிடுகிறார். குத்தாலம் ஒன்றிய பகுதியில் பிரசாரம் தொடங்கிய அவர், பெரம்பூர் ஊராட்சியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் அவருக்கு சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.இதைத் ்தொடர்ந்து அவர், பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு் பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அனைவருக்கும் வீடு
அப்போது அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அம்மா இல்லம் திட்டம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கப்படும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு அம்மா வாஷிங்மெஷின் வழங்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். 

ஆண்டு முழுவதும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும். பல்வேறு திட்டங்கள் பூம்புகார் தொகுதியில் செயல்படுத்திட எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார். 

அப்போது அவருடன் ஒன்றிய பேரவை செயலாளர் கண்ணாத்தா என்ற சுரேஷ், பா.ம.க. மாநில அமைப்பு துணை தலைவர் எம்.ஆர்.ஜெ. முத்துக்குமார், மாவட்ட அமைப்பு தலைவர் மைனர் ்சந்திரசேகர் உள்பட அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்