சேலம் சிறையில் கைதிகள் பதுக்கிய செல்போன் கண்டுபிடிப்பு

சேலம் சிறையில் கைதிகள் பதுக்கிய செல்போனை போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர்.

Update: 2021-03-26 23:31 GMT
சேலம்:
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகள் சிலரிடம் செல்போன் புழக்கம் இருப்பதை சிறை போலீசார் அவ்வப்போது கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சிறை போலீசார் நேற்று சிறைக்குள் திடீரென சோதனை நடத்தினர். 
அப்போது கைதிகள் குளிக்கும் தண்ணீர் தொட்டி அருகே மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த ஒரு செல்போனை போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர். பின்னர் அந்த செல்போனை பயன்படுத்திய கைதிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்