அரியலூரில் 7 பேருக்கு கொரோனா

அரியலூரில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-03-26 21:34 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 800 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 49 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 715 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்