லாரி உரிமையாளரிடம் ரூ.1.94 லட்சம் பறிமுதல்
செங்கோட்டை அருகே லாரி உரிமையாளரிடம் இருந்து ரூ.1.94 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
செங்கோட்டை, மார்ச்:
செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் சாந்தி மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். கேரள மாநிலம் திருவில்லாவில் இருந்து ஆலங்குளம் நோக்கி வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது லாரி உரிமையாளர் பிரகாஷிடம் ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அந்த பணம் கேரளாவில் காய்கறிகள் விற்றதன் மூலம் கிடைத்த பணம் என்று அவர் கூறினார். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து கடையநல்லூர் தேர்தல் துணை தாசில்தார் நாகராஜனிடம் ஒப்படைத்தனர்.