தி.மு.க. சுவரொட்டி ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியில் சோதனை

நெல்லை அருகே தி.மு.க. சுவரொட்டி ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியில் அதிகரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2021-03-26 21:01 GMT
நெல்லை, மார்ச்:
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை தாழையூத்து குறிச்சிகுளம் 4️ வழிச்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் துணை ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர். இதில் தி.மு.க. கட்சியின் சுவரொட்டிகள், விளம்பர பொருட்கள் இருந்தன. அரசியல் கட்சி பொருட்கள் கொண்டு செல்லப்படுவதால் அதில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளதா? என தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சுவரொட்டிகள் மட்டுமே இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் கொண்டு செல்வதற்கு உரிய அனுமதி பெறப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதை அடுத்து வந்த லாரி விடுவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்