களக்காடு பகுதியில் நடிகர் இமான் பிரசாரம்

களக்காடு பகுதியில் நடிகர் இமான் அண்ணாச்சி பிரசாரம் செய்தார்.;

Update: 2021-03-26 20:40 GMT
களக்காடு, மார்ச்:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து களக்காடு அண்ணா சிலை அருகே நடிகர் இமான் அண்ணாச்சி பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், “நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் ரூபி மனோகரன் கொரோனா காலத்திலும் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியவர். அவரை மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் வருத்தப்படுவீங்க” என்றார். முன்னதாக அவர் ஏர்வாடி, மாவடி, சிதம்பரபுரம் பகுதியிலும் ரூபி மனோகரனுக்கு ஆதரவு திரட்டினார்.

மேலும் செய்திகள்