பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-03-26 20:17 GMT
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
சட்டமன்ற தேர்தல் 
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ந்் தேதி  ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அருப்புக்கோட்டை சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனை 
 அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளான மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை, பாளையம்பட்டி விலக்கு, பந்தல்குடி விலக்கு ஆகிய பகுதிகளில் அருப்புக்கோட்டை நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் 3 குழுக்களாக பிரிந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்தநிலையில் தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பாளர் முத்து சரவணகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம், தலைமை காவலர் முருகேஸ்வரி மற்றும் பறக்கும் படை குழுவை சேர்ந்தவர்கள் பாலையம்பட்டி நான்கு வழிச்சாலை விலக்கு வழியாக அருப்புக்கோட்டை நகருக்குள் வரும் வாகனங்களில் சோதனையில் ஈடுபட்டனர். 
வீடியோ மூலம் பதிவு 
வாகன சோதனைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்