22,156 தேர்தல் பணியாளர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி

22,156 தேர்தல் பணியாளர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நேற்று வழங்கப்பட்டது.

Update: 2021-03-26 20:13 GMT
கோவை,

தமிழக சட்ட மன்றத்திற்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 4,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 

இந்த வாக்குச்சாவடிகளில் முதன்மை வாக்குச்சாடி மைய அலுவலர்கள் உள்பட 22 ஆயிரத்து 156 பேர் தேர்தல் பணி புரிகின்றனர்.
இந்த தேர்தல் பணியாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி கடந்த 14-ந் தேதி வழங்கப்பட்டது. 

இதையடுத்து 2-ம் கட்ட பயிற்சி நேற்று வழங்கப்பட்டது. கோவையில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளில் பணிபுரியும் தேர்தல் பணியாளர்களுக்கு சட்ட மன்ற தொகுதிக்கு ஒன்று வீதம் 10 இடங்களில் பயிற்சி நடைபெற்றது. கோவை கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற பயிற்சியை கலெக்டர் நாகராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த பயிற்சியின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு கையாள்வது, பேலட், கண்ட்ரோல் யூனிட், வி.வி.பேட் ஆகிய 3 எந்திரங்களையும் எவ்வாறு இணைப்பது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டால் எவ்வாறு அதனை சரி செய்வது? கொரோனா தடுப்பு வழிமுறைகள் ஆகியவை குறித்து தெளிவாக எடுத்து கூறப்பட்டது.

மேலும் செய்திகள்