மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஆசிரியர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஆசிரியர் பலியானார்.

Update: 2021-03-26 20:06 GMT
வெள்ளியணை
கரூர் அருகே உள்ள சோமூர் பகுதி காளியப்ப கவுண்டன் புதூரை சேர்ந்தவர் மணிவேல் (வயது 26). இவர் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் என். புதூர் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று கிருஷ்ணராயபுரத்தில் இருந்து கரூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புலியூர் குளத்துப்பாளையம் அருகே சென்றபோது அய்யர்மலை பகுதியில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றி சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்