பறக்கும் படை செயல்பாடுகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு

பறக்கும் படை செயல்பாடுகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு.

Update: 2021-03-26 19:19 GMT
ஊட்டி,

சட்டமன்ற தேர்தலையொட்டி மதுபானங்களை கடத்தி செல்வது, பரிசு பொருட்கள் வினியோகம் செய்வது, பணம் பட்டுவாடா செய்வது ஆகியவற்றை தடுக்கும் வகையில் கண்காணிப்பு குழுக்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 தொகுதிகளில் தலா 9 பறக்கும் படைகள், தலா 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் உள்பட மொத்தம் 57 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த நிலையில் ஊட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பனுகர் பெஹரா, ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை எச்.பி.எப். இந்துநகர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்கிறார்களா? என்று திடீரென நேரில் பார்வையிட்டார். 

அப்போது சந்தேகத்துக்கிடமான அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்துகிறார்களா?, தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று பறக்கும் படை செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்