நீலகிரியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
நீலகிரியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.;
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 60). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவளது பெற்றோர் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அதில் பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காளிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.